ஜகஜால கில்லாடியாக மாறிய விஷ்ணு விஷால்
'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை எழில் இயக்கி வருகிறார். பெயரிடப்படாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
'ஜகஜால கில்லாடி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை துஷ்யந்த் தயாரித்து வருகிறார்.
ஒளிப்பதிவாளராக கே.ஜி.வெங்கடேஷ், இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார்கள். முருகன் கதை எழுத ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதியுள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகும் 12-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது....