நடிகர் நிழல்கள் ரவி பிறந்த தின பதிவு
நிழல்கள் ரவி ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் துறையில் நடிகர் நிழல்கள் ரவி, நிழல்கள் தமிழ் திரைப்படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் காதலில் விழுந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் தந்திருந்தாலும், ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. ஆனால் அவர் நடித்த வேதம் புதிது, நாயகன், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணாமலை, மறுபடியும் மற்றும் ஆசை உட்பட பல படங்களில் சிறப்பான பாத்திர...
