நிழல்கள் ரவி  ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படத் துறையில் நடிகர் நிழல்கள் ரவி, நிழல்கள் தமிழ் திரைப்படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் காதலில் விழுந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் தந்திருந்தாலும், ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. ஆனால் அவர் நடித்த வேதம் புதிது, நாயகன், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணாமலை, மறுபடியும் மற்றும் ஆசை உட்பட பல படங்களில் சிறப்பான பாத்திரங்களில் நடித்திருந்தார். அவர் ஒரு அன்பான இதயமுள்ள தந்தை, இரக்கமற்ற வில்லன் அல்லது ஒரு முதுகில் குத்துபவர் போன்ற பாத்திரங்களை சித்தரிக்கிறார். தமிழில் ஒளிபரப்பப்பட்ட கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சிக்காக அமிதாப் பச்சனுக்கு பின்னணி செய்தார். 1980 களில் மலையாளத்தில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார். 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் டைரக்டர் கே. பாலசந்தரின் தொலைகாட்சித் தொடரான இரயில் சினேகம் என்பதில் நடித்தார்.
அவர் கோயம்புத்தூர் பூ.சா.கோ கலைக்கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் ஷியாமன்னா மற்றும் டி. ராஜம்மாள் ஆகியோருக்கு ரவிச்சந்திரன் என்ற இயற்பெயருடன் பிறந்தார். அவர் விஷ்ணுபபிரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ராகும் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
இவர் நடித்த படங்கள்:  பரிசல், தியா, தமிழ் படம் 2, நாரதன், கதம் கதம், வணக்கம் சென்னை, ஒஸ்தி, வேங்கை, காவலன், சிங்கம், மாஞ்சா வேலு, அதே நேரம் அதே இடம், கண்டேன் காதலை, சக்கரகட்டி, தாம் தூம், குசேலன், ஜெயம் கொண்டான், தாமிரபரணி, பெரியார், சீனா தானா 001, கலாபக் காதலன், சரவணா, ஒரு கல்லூரியின் கதை, ஆறு, அட்டகாசம், அலை, ஜெயம், வசீகரா, ரெட், வில்லன், பார்த்தாலே பரவசம், சிட்டிசன், ஷாஜகான், குஷி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், என்றென்றும் காதல், ஜோடி, நெஞ்சினிலே, இந்தியன், குருதிபுனல், ஆசை, டூயட், சிங்காரவேலன்

Related