“தாயின் மகிழ்ச்சிக்காக மகன் போராடும் கதை!” – விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ ஆகஸ்ட் 7 முதல் ZEE5-ல்
"தாயின் மகிழ்ச்சிக்காக மகன் போராடும் கதை!" – விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' ஆகஸ்ட் 7 முதல் ZEE5-ல்
குடும்ப உறவுகளையும், சமூகத்தின் பழைய மனநிலைகளையும் கேள்விக்குள்ளாக்கும் உணர்வுபூர்வமான திரைப்படமாக கவனம் பெற்ற 'நூறு சாமி', வரும் ஆகஸ்ட் 7 முதல் ZEE5 OTT தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். 'பிச்சைக்காரன்' படத்திற்கு பிறகு சசி – விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் இந்தப் படத்தின் முக்கிய சிறப்பாகும்.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'நூறு சாமி', ஒரு விதவைத் தாய் தனது வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியைத் தேடும் முடிவை மையமாகக் கொண்ட கதை. அந்த முடிவை சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சூழலில், தனது தாயின் விருப்பத்திற்காக உறுதுணையாக நிற்கும் மகனின் பார்வையில் கதை நகர்கிறது.
பொதுவாக தாயின் தியாகங்களை மட்ட...
