மறைந்த முதல்வர் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஸ்ரீ ரெட்டி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு திரையுலகிலும் பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் அவர் திரையுலகினர் பலர் மீதும் வைத்த குற்றச்சாட்டு.
இதனால் தெலுங்கு திரையுலகம் அவரை ஒதுக்கிவிட்ட நிலையில் தமிழ்த்திரையுலகில் ஒரு சிலர் ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக குரல் எழுப்பியதோடு, அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தந்து பட பூஜை கூட போட்டனர். இந்த நிலையில் தெலுங்கிலும் ஸ்ரீ ரெட்டியை தேடி மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் அவர்களின் இரண்டாவது மனைவியான லட்சுமி சிவபார்வதியை மையப்படுத்தி உருவாகும் 'லட்சுமி வீரகிரந்தம்' என்கிற படத்தில் டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார் ஸ்ரீ ரெட்டி. இந்தப்படத்தின்...
