ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரைவிமர்சனம் (கலாட்டா கலக்கல்)
கருப்பன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள அடுத்த படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக பூர்த்தி செய்தது. படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை பார்த்து விடலாம்.
ஆந்திர மாநிலம் எமசிங்கபுரம் என்ற ஒரு மலைகிராமம் தான் படத்தின் கதைக்களம். இங்கு வாழும் அனைவரும் நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது மட்டும் தான் இவர்களது தொழில். எமனையே முதற்கடவுளாக
நினைத்து வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர்.
தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று...