ஒரு கிடாயின் கருணை மனு – திரைவிமர்சனம் (செமவிருந்து) Rank 3.5/5
தொடர்ந்து சிறந்த கதைகள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டு தான் இருக்கிறது என்று தான் சொல்லணும் அதற்கு முக்கிய காரணம் புதிய இயக்குனர்கள் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் நல்ல விஷயம் இல்லை என்றால் ரசிகர்கள் திரையரங்கம் பக்கம் வருவதில்லை என்று தற்போது சினிமா நிருபித்துள்ளது. என்று தான் சொல்லணும் அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸ் படம் ஒரு கிடாயின் கருணை மனு மிக சிறந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது எந்த வித கமர்சியல் விஷயங்கள் இல்லாமல் கதையை மட்டும் நம்பி களம் இறங்கிய படம் என்று தான் சொல்லணும்.
பல கோடிகளில் பணம் கொட்டி, டாப் ஸ்டார்கள், நவீனமயமான உயர் தொழில்நுட்பங்கள், வித வித லொகேஷன்கள் என பார்த்துப் பார்த்துச் செதுக்கிய படங்கள் பல குப்புற விழுந்து விடுகின்றன. தோல்விக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். ஆனால், ‘‘ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சரிவிகிதத்தில் கலக்கும்போது த...

