Wednesday, December 17
Shadow

Tag: #orukuppaikathai #dinesh #manishyadav

சத்யஜித்ரே படம் போல இருக்கிறது” ; ஒரு குப்பை​க்​ கதைக்கு வைகோ பாராட்டு

சத்யஜித்ரே படம் போல இருக்கிறது” ; ஒரு குப்பை​க்​ கதைக்கு வைகோ பாராட்டு

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்கு​ந​ர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பை​க்​ கதை' படம் வெளியானது.. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப்​ ​படத்தை​க்​ கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக க​ட்​சியின் பொதுச்செயலாளர்​ வைகோ ​ வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த வைகோ ​ இந்தப்​ ​படம் குறித்து மிகவும் சிலாகித்து, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.. "பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஒரு குப்பை​க்​ கதை' படத்தை​ப்​ பார்க்கவேண்டும்.. இன்றைக்கு மணமுறிவுகள் ஏற்படுவது, கள்ளக்காதலில் மனைவி படுகொ...
குப்பை பொறுக்கியபோது அதிர்ந்த தினேஷ் மாஸ்டர்

குப்பை பொறுக்கியபோது அதிர்ந்த தினேஷ் மாஸ்டர்

Latest News, Top Highlights
‘பிரபுதேவா’ நடித்த மனதை திருடிவிட்டாய் படம் மூலம் டான்ஸ் மாஸ்டர் ஆனவர் தினேஷ்.. பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்ற இவர் தற்போது 'ஒரு குப்பைக் கதை' தம மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். . இதில் கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி என்பவர் இயக்கியுள்ளார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். நாளை மே-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், நடனத்தில் இருந்து நடிப்புக்கு மாறிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் தினேஷ் மாஸ்டர் “சின்னவயதிலேயே எனக்குள் இருந்த நடனத்திறமையை கண்டுபிடித்தது என் சகோதரர்கள் தான். என் அப்பாவும் எனக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல இய...
ஒரு குப்பைக்கதை – திரைவிமர்சனம் (அவசியம்)  Rank 4/5

ஒரு குப்பைக்கதை – திரைவிமர்சனம் (அவசியம்) Rank 4/5

Review, Top Highlights
அரசனை நம்பி புருசனை கைவிட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போகும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறது 'ஒரு குப்பைக் கதை'. ஓசூரில் உள்ள ஒரு வீட்டு விலாசத்தை தேடிப் போகும் குமார் (தினேஷ் மாஸ்டர்), போன இடத்தில் ஒரு கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடையும் காட்சியுடன் தொடங்குகிறது படம். பிளாஷ்பேக் காட்சிகளுடம் கதை விரிகிறது. சென்னையின் கூவம் ஆற்றங்கரையோரும் உள்ள ஒரு குப்பத்தில் வசிக்கும் இளைஞர் குமார். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி. ஆனால் தனது வேலையை மனதார நேசிக்கும் மனிதர். சென்னையை சிங்கார சென்னையாக்கும் மனிதன் தான் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அளவுக்கு வேலை மீது அளவு கடந்த பற்று வைத்திக்கிறார் குமார். ஆனால் அவரது வேலையே அவரது திருமணத்திற்கு தடையாக அமைகிறது. வால்பாறையில் வசிக்கும் பூங்கொடியை(மனிஷா) பெண் பார்க்க போகிறார் தினேஷ். மாப்பிள்ளை சென்னையில் கிளர்க் வேலை ச...
“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு..!

“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு..!

Latest News, Top Highlights
சமுதாயத்திற்கு பயன்படும் கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் இந்தப்படம் கமர்ஷியலாகவும் இருக்கும் என கூறும் காளி ரங்கசாமி இந்தப்படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.. சத்தியமங்கலம் பக்கத்தில் வீரப்பனூர் தான் என் சொந்த ஊர்.. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவன், அப்படி இப்படி என போராடி இயக்குனர் எழிலிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினேன்.. பின்னர் இயக்குனர் அஸ்லமிடம் இணை இயக்குனராக சேர்ந்து ‘பாகன்’ படத்தில் வேலை பார்த்தேன்.. இதோ இப்போது ‘ஒரு குப்பை கதை’ படம் மூலம் இயக்குனராகியுள்ளேன்.. இயக்குனர் அஸ்லம் எனது நீண்டகால நண்பர், உறவினர்.. அவர் ‘பாகன்’ படம் இயக்கியபிறகு, அவரைப்போல என்னையும் ஒரு இயக்குனராக்கி அழகு பார்க்க விரும்பினார்.. எனக்காக பல தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்தார். ஒருகட்டத்தில் தனது பட வேலைகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு நானே படத்தை ...
உங்களுக்குமட்டும் தான் கோவம் வருமா எங்களுக்கும் வரும் கொத்திக்கும் உதயநிதி  கோவம் நியாமானதா

உங்களுக்குமட்டும் தான் கோவம் வருமா எங்களுக்கும் வரும் கொத்திக்கும் உதயநிதி கோவம் நியாமானதா

Latest News, Top Highlights
தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள ஒரு குப்பை கதையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய் நடித்த குருவி படத்தை தான் முதன்முதலில் தயாரித்தேன். நிறைய படங்கள், நிறைய ஹிட் படங்கள், நிறைய ஆவரேஜ் படங்கள், கொஞ்சம் மட்டமான படங்கள் கொடுத்துள்ளோம். இந்த பத்து ஆண்டுகள் நாங்கள் இருக்க அப்பப்போ நல்ல படங்கள் அமைந்துவிடும். அதில் இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். எப்படி நான் ஒரு கல் ஒரு கண்ணாடி துவங்கி சந்தானத்துடன் பண்ணினேன். அது போன்று தான் தினேஷ் மாஸ்டருடனும். எல்லோரும் என்னை கிண்டலடிப்பார்கள். சந்தானம் சார் ஹீரோ இவர் அவருடைய நண்பராக நடிப்பார், அதனால் அப்படியே ஓடிக்கி...
“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”; ‘ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..!

“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”; ‘ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..!

Latest News, Top Highlights
பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி.. மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அ...