‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். – இயக்குனர் ஆறுமுக குமார்
வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் இந்திய சினிமாவிலேயே சிலர் தான். இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது அடுத்த படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' நாளை பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை '7C's Entertainment Private Limited' மற்றும் 'Amme Narayana Entertainment' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' குறித்து அதன் இயக்குனர் ஆறுமுக குமார் பேசுகையில் , '' இது ஒரு முழு நீள காமெடி கலந்த ஜனரஞ்சகமான படம். இந்த கதை களம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தோம். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது பெஸ்ட்டை தந்துள்ளனர். விஜய் சேதுபதி அவர்களுடன் பணிபுரிந்தது ஒரு...





