Friday, April 17
Shadow

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்த ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’

ஆறுமுககுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.

தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 2-ம் தேதி ‘ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.

காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுக்குள் வாழ்வது போலவும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார்.

Leave a Reply