Friday, January 16
Shadow

Tag: #otthaikku ottha #naren #jastin prabhakaran

மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

மாணவர்களின் பலம் என்ன என்பதை உணர்த்த இருக்கின்றது ‘ஒத்தைக்கு ஒத்த’ திரைப்படம்

Latest News
"மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்..." என்ற பழமையான பாடலின் வரிகள், தற்போது இருக்கும் சூழ்நிலையை மிக அழகாக அனைவருக்கும் உணர்த்துகின்றது. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போராடி, அதில் வெற்றி கண்டிருப்பது, அவர்களின் ஒற்றுமையையும், பலத்தையும் தெளிவுபடுத்துகிறது. அத்தகைய வலிமையான மாணவ சக்தியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கின்றது, அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'ஒத்தைக்கு ஒத்த' திரைப்படம். 'அட்டக்கத்தி மற்றும் 'மெட்ராஸ்' படங்களில் பா ரஞ்சித்தின் உதவியாளராக பணிபுரிந்த பர்னீஷ் இயக்கும் 'ஒத்தைக்கு ஒத்த' படத்தை 'விஷன் ஐ மீடியா' சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். பழம்பெரும் நடிகர் தியாகராஜன் மற்றும் 'அஞ்சாதே' நரேன் ஆகியோர் இந்த முக்கிய கதா...