பள்ளிபருவத்திலே – திரைவிமர்சனம் Rank 1.5/5
அவ்வப்போது சில படங்களின் கதைகள் உண்மைகளை தாங்கி பிடித்து வரும். அப்படியாக ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் தான் இந்த ’பள்ளிப்பருவத்திலே’.
ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமையாசிரியராக வருகிறார் கே எஸ் ரவிக்குமார். இவருக்கு மகனாக நாயகனாக வரும் கலை(நந்தன் ராம்). அதே பள்ளியில் மாணவனாகவும் இருக்கிறார்.
அதே பள்ளியில் நாயகனுடன் அதே வகுப்பில் படித்து வருகிறார் நாயகி கனி(வெண்பா). நாயகி கனி மீது கலைக்கு காதல். கனியின் தந்தை பொன்வண்ணன் ஊரில் மிகவும் வசதியான செல்வாக்கு மிக்க நபர். கனியின் சித்தப்பாவாக வரும் ஆர் கே சுரேஷ் கொஞ்சம் முரட்டு குணம் படைத்தவர். அடிதடி என்றால் முதல் ஆளாக நிற்பவர்.
கலையின் காதல் பொன்வண்ணனுக்கும் ஆர் கே சுரேஷுக்கும் தெரிய வர,விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. அனைவரையும் மீறி கலையின் காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நா...
