100 புதிய முகங்கள்… யுவன் ஷங்கர் ராஜாவின் இசை… ஜோஜு ஜார்ஜின் அடுத்த அதிரடி ‘பரிபாடி’!
100 புதிய முகங்கள்… யுவன் ஷங்கர் ராஜாவின் இசை… ஜோஜு ஜார்ஜின் அடுத்த அதிரடி ‘பரிபாடி’!
ஐந்து மொழிகளில் டிசம்பரில் வெளியாகிறது – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மலையாளத் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் கவனம் ஈர்த்து வரும் ஜோஜு ஜார்ஜ், தனது அடுத்த படைப்பான ‘பரிபாடி’ மூலம் மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2024-ஆம் ஆண்டு வெளியான ‘பனி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் இரண்டாவது திரைப்படம் ‘பரிபாடி’. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், சுமார் 100 புதிய நடிகர்...
