வடசென்னை தமிழ் சினிமாவில் மிக பெரிய இடத்தை கொடுக்கும். நடிகர் பாவல் நவகீதன்.
எனக்கு என் அப்பாவை போலவே பத்திரிகையாளராக வரவேண்டும் என நினைத்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒளிப்பதிவாளராக ஆகவேண்டும் என்ற ஆசை வந்தது. எனது ஊர் செங்கல்பட்டு. அங்கு தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். படிப்பு ஏறவில்லை. ஆனால் எனது ஆசிரியர் என் அப்பாவிடம் உங்கள் மகனுக்கு நன்றாக கற்பனை வளம் இருக்கிறது. ஆகையால் VISCOM படிக்க வையுங்கள் என்றார். மதிப்பெண் குறைவாக எடுத்ததால் லயோலா கல்லூரியில் Socialogy தான் கிடைத்தது. இரண்டாம் வருடம் காலையில் Socialogy- யும், மாலையில் VISCOM - மும் பயின்றேன். அப்போது இயக்குநராகத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அங்கு எனக்கு சீனியரான 'குற்றம் கடிதல்' படத்தின் இயக்குநர் பிரம்மா சார் அறிமுகம் கிடைத்தது. பிறகு 'நாளந்தா வே' என்ற அமைப்பில் 5 வருடம் குழந்தைகளுக்கு புகைப்படம் எடுத்தல், கதை எழுதுதல், வாழ்க்கை திறன், குறும்படம் எடுத்தல் போன்ற துறைகளில் பயிற்சியாளராக இருந்தே...