Wednesday, May 31
Shadow

Tag: #prabhas #shraddakapoore #shankarmahadevan #sabusiril #sujith #vamsi

மும்மொழியில் சாஹூ – பாகுபலி நாயகன் பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்

மும்மொழியில் சாஹூ – பாகுபலி நாயகன் பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்

Latest News
பாகுபலியின் இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹூ. முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதிச் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு அதிரடி திரைப்படம் சாஹூ. இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகியை அறிவித்திருக்கிறார்கள். படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர். ஆம், ஹசீனா பார்க்கர் படநாயகியே சாஹூவில் பிரபாசுடன் திரையைப் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார். ஆஷிக்-2 படத்தின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட ஸ்ரத்தா கபூர், இயக்குனர் SS ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்ப...