ஆறு வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ்
தமிழ் சினிமாவில் இன்று முக்கிய படம் என்றால் அது கருப்பு ராஜ வெள்ளை ராஜா தான் அதற்கு முக்கிய காரணம் தமிழில் ஒரு பெரிய இடைவெளிக்கு பின் பிரபுதேவா இய்க்கும் படம் அதுமட்டும் இல்லை இந்த படத்தின் மூலம் நடிகர் சங்கத்துக்கு நட்பான விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்கிறார்கள். இந்த இரண்டு விஷயங்களே இந்த படத்துக்கு ஒரு மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
'குலேபகவாலி', 'எங் மங் சங்' உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துக் கொண்டே 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளை முடித்துவிட்டார் பிரபுதேவா.
விஷால், கார்த்தி, சாயிஷா சைகல் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தை ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் பாடல் பணிகளுக்காக பிரபுதேவா மற...