Friday, November 8
Shadow

Tag: #prabhudeva #nyanthara #vigneshsivan

மீண்டும் நயன்தாரா பிரபுதேவா கடும் கோவத்தில் விக்னேஷ் சிவன்

மீண்டும் நயன்தாரா பிரபுதேவா கடும் கோவத்தில் விக்னேஷ் சிவன்

Latest News
நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போலி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த புகைப்படம் உலா வருவது இது இரண்டாவது முறை ஆகும். நடிகர் சிம்புவை பிரிந்த பிறகு நயன்தாரா நடிகரும், இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக அவர் மதம் மாறினார். மேலும் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார். பிரபுதேவாவுக்காக அவர் சினிமாவில் இருந்து கூட ஒதுங்கினார். இருப்பினும் அந்த காதல் முறிந்துவிட்டது. நயன்தாராவும், பிரபுதேவாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு போலி புகைப்படம் ஒன்று முன்பு வெளியானது. தற்போது அதே புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா அண்மையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து பிரபுதேவாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. ...