வீரா” திரைப்படத்தில் வட சென்னையை வாழ்க்கையை பிரதிபலிக்கும் இசையமைப்பாளர் பிரசாத் S.N
வீரா” திரைப்படத்தில் வட சென்னையில் வாழ கூடிய மக்களின் வாழ்க்கையை தெளிவாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். – இசையமைப்பாளர் பிரசாத் S.N
நேற்று வெளியான வீரா திரைபடத்தில் வரும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படம் பார்த்த அனைவரும் பின்னணி இசையை பற்றி சமூகவலைத்தளங்களிலும், செய்தி தளங்களிலும் பேசி வருகிறார்கள். இதை பற்றி படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் S.N நம்மிடம் கூறியது.
படத்திற்கு பின்னணி இசை மிகவும் முக்கியமான ஓன்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த படத்திற்கு பின்னணி இசை மிக சிறப்பாக இருக்கும். படத்தில் வரகூடிய நகைசுவை காட்சியையோ அல்லது சண்டை காட்சியையோ மாற்றியமைக்க கூடிய ஓன்று தான் பின்னணி இசை. உணர்ச்சி வசப்பட வைக்கும் காட்சியை கூட நகைச்சுவை காட்சியாக மாற்றியமைக்கலாம். படத்திற்கு பின்னணி இசை சரியாக அமையவில்லை என்றால் படம் முழுவதும் நன்றாக இருக்காது. இந்த படத்தில...