அந்தாதுன் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்யில் நடிக்கும் டாப் ஸ்டார் பிராஷந்த்
நடிகர் தியாகராஜன் அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் பிரஷாந்த்.
இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
ஏற்கெனவே, தியாகராஜன் ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து தியாகராஜன் பேசுகையில், 'அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்...
