
ரசிகர்களை கவர்ந்த பிரியா வாரியருக்கு இந்த நிலைமையா?
சமீப காலமாகவே கேரள படங்களுக்கும், பாடல்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ப்ரேமம் மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்னர் தற்போது டிரெண்டாகி வருகிறார் பிரியா வாரியர்.
மலையாளத்தில் `ஹேப்பி வெட்டிங்', `சங்ஃஸ்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஒமர் லூலு தற்போது `ஒரு அடாரு லவ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ பாடல் ஒன்றை கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது.
`மாணிக்ய மலராய பூவி' என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார். ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்கின்றனர். அப்போது, தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பிரியாவின் பார்வை தான் சமூக வலைதளங்களில்...