திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்! – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து
திமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
நாம் வாழும் இந்த மாநிலத்திற்கே ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமை திமுக என்ற கட்சிக்குத்தான் உண்டு. அத்துடன் நம் தாய்மொழியை பின்னுக்கு தள்ள வந்த இந்தியை ஓட ஓட விரட்டிய வீரமும் திமுகவிடம்தான் இருந்தது. மேலும் கைம்பெண் மறுமணம் தொடங்கி சுய மரியாதையும், சீர்திருத்தமும் கொண்ட சிந்தனையும், செயல்களும் திமுகவிடம்தான் இருந்தது. இது மட்டுமின்றி எத்தனையோ புரட்சிகளும், சாதனைகளும் படைத்த திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தமிழர்களின் கலங்கரை விளக்கின் தலைமை பொறுப்புக்கு வரும் ”சின்னக் கலைஞர்” தளபதி மு.க. ஸ்டாலினுக்கு இந்த எளியோன் பப்ளிக் ஸ்டார் துரை. சுதாகர் தன் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், வாழ்த்துகள...
