
சூர்யாவுடன் மோத தயாராகும் ராகவா லாரன்ஸ்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 (எஸ்3) படம் சில மாறுதல்களுக்கு பிறகு 26 ஜனவரி 2017 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸை திருநாளை முன்னிட்டு தன் சிவலிங்கா படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
பி. வாசு இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார்.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜனவரி வெளியீடு என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
ஜனவரியில் விஜய்யின் பைரவா மற்றும் சூர்யாவின் சி3 ஆகிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவுள்ளது.
எனவே இந்த இரண்டில் ஒன்றுடன் லாரன்ஸ் மோதக்கூடும் என தெரிகிறது.
பொங்கல் ரிலீசுக்கு எட்டு படங்கள் வரிசை கட்டி நிற்பதால், 99% சூர்யா படத்துடன் மோதுவார் என்றே தகவல்கள் வந்துள்ளன....