
சிவலிங்கா படத்தில் முக்கய பாத்திரத்தில் புறா நடிக்கிறது
கன்னடத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘சிவலிங்கா’ படத்தை இயக்குநர் பி. வாசு தமிழில் மறுபதிப்பு செய்துள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் இயக்குனர் பி.வாசு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவலிங்கா திரைப்படம் ஒரு கிரைம் ஹாரர் திரில்லர் படம். கடந்த பிப்ரவரி 12-ம்தேதி கன்னடத்தில் இப்படத்தை இதே பெயரில் ரிலீஸ் செய்தேன். சிவராஜ் குமார் நடித்திருந்தார். 85 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மிகப்பெரிய வெற்றிப்படம். சந்திரமுகிக்குப் பிறகு கன்னடத்தில் இருந்து தமிழில் ர...