முதல் முறையாக விமானத்தில் பறக்கப் போகும் 50 பேர்… கனவுகளுக்கு சிறகளிக்கும் ரெயின்டிராப்ஸ்!
முதல் முறையாக விமானத்தில் பறக்கப் போகும் 50 பேர்... கனவுகளுக்கு சிறகளிக்கும் ரெயின்டிராப்ஸ்!
சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானப் பயணம்; கல்லணை, தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு ரயிலில் சென்னை திரும்பும் சிறப்புப் பயணம்!
சென்னை: விமானத்தில் பயணம் செய்வது பலருக்கு இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஆனால், பொருளாதாரச் சூழலால் இதுவரை விமானத்தை அருகில் இருந்து மட்டுமே பார்த்து ரசித்த பலருக்கு, அதில் ஒருமுறையாவது பயணம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவே இருக்கும். அத்தகைய கனவுகளை நனவாக்கும் முயற்சியில் மீண்டும் களமிறங்கியுள்ளது ரெயின்டிராப்ஸ் சாரிட்டி ஃபவுண்டேஷன்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 'ரெயின்டிராப்ஸ் வானமே எல்லை' என்ற பெயரில் 50 பேருக்கு முதல் விமானப் பயண அனுபவத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, வரும் நவம்பர் 14-ம் தேதி சென்னையிலிருந்து திருச்சிக்கு 50 பேர் விம...
