
ராஜமௌலியை வியக்க வைத்த டைரக்டர்ஸ் கிளப்.
உதவி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு.
இக்குழுவினை மகிழ்திருமேனியின் துணை இயக்குனர் சக்தி என்பவர் நடத்தி வருகிறார்.
இக்குழுவினை பற்றி சக்தி கூறுகையில் :
இதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் உதவி இயக்குனர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.
முதலில் நாங்கள் எங்கள் குழுவில் எங்களுக்கு ஏற்பட்ட சினிமா சம்பந்தப்பட்ட சந்தேகங்களை விவாதிக்கவே இக்குழுவினை ஆரம்பித்து விவாதித்தோம்.
பிறகு அந்தந்த துறை சார்ந்த ஜாம்பவான்களை அழைத்து வந்து பேச வைத்தோம் அதற்கு துணையாக இருந்து உதவியவர் உதவி கொண்டிருப்பவர் எனது நண்பரும் எங்கள் குழுவின் PRO ஆனந்த் அவர்கள்.
இக்குழுமூலம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் எங்கள் சந்தேகங்களை தீர்க்க முடிந்தது.ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டியவர்கள் இக்குழுவினை பற்றி அறிந்து தானே வந்து எங்கள் சந்தேகங்களை தீர்த்தனர் . இந்த குழுவில் ...