உதவி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு.
இக்குழுவினை மகிழ்திருமேனியின் துணை இயக்குனர் சக்தி என்பவர் நடத்தி வருகிறார்.
இக்குழுவினை பற்றி சக்தி கூறுகையில் :
இதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் உதவி இயக்குனர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர்.
முதலில் நாங்கள் எங்கள் குழுவில் எங்களுக்கு ஏற்பட்ட சினிமா சம்பந்தப்பட்ட சந்தேகங்களை விவாதிக்கவே இக்குழுவினை ஆரம்பித்து விவாதித்தோம்.
பிறகு அந்தந்த துறை சார்ந்த ஜாம்பவான்களை அழைத்து வந்து பேச வைத்தோம் அதற்கு துணையாக இருந்து உதவியவர் உதவி கொண்டிருப்பவர் எனது நண்பரும் எங்கள் குழுவின் PRO ஆனந்த் அவர்கள்.
இக்குழுமூலம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் எங்கள் சந்தேகங்களை தீர்க்க முடிந்தது.ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டியவர்கள் இக்குழுவினை பற்றி அறிந்து தானே வந்து எங்கள் சந்தேகங்களை தீர்த்தனர் . இந்த குழுவில் இயக்குனர்கள்,
முருகதாஸ், மகிழ்திருமேனி, வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடிகர் மாதவன் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்கி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் பாகுபலி படமூலம் உலகையே இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலி எங்கள் குழுவில் எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும் எங்களை உற்சாகப்படுத்தவும் சுமார் இரண்டரை மணி நேரம் எங்களோடு இருந்தார் என்பது இன்றும் வியப்பாகவே உள்ளது என்றவர்
இந்த குழுவில் அட்மின் யார் யார் என்று கேட்டால் நான் மட்டும் தான் என்கிறார் சக்தி.
காரணம் இதில் ஆண் பெண் என இருபாலரும் உள்ளனர் அதேபோல் தற்போது பெரிய பெரிய பிரபலங்கள் வருகிறார்கள் அவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும்
மேலும் இக்குழுவிலிருந்து பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்களையும் தேர்வு செய்கிறார்கள்
எனவே
நான் அந்த உதவி இயக்குனரை நன்கு விசாரித்து பிறகு தான் குழுவில் இணைப்பேன் என்கிறார்.
சக்தியின் இந்த முயற்சியை குழுவில் வந்த அனைத்து ஜாம்பவான்களும் பாராட்டியதோடு
அனைவரும் வாட்ஸ் ஆப் குருப்பில் செய்திகளை பகிர்ந்து கொள்ள மட்டுமே பயன்படுத்தும் வேளையில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து உரையாடல் செய்யும் புதிய சிந்தனைக்காக
அவருக்கு நண்பராகவும் மாறி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது தமிழ் திரையுலகை தொடர்ந்து இந்தி மற்றும் Hollywood கலைஞர்களையும் விரைவில் இக்குழுவிற்கு கொண்டு வருவேன் என்கிறார் உற்சாகமாக….