
ஜாலியாக கடந்துப்போகும் அப்பா, மகன் பற்றிய கதைதான் “ராஜாவுக்கு ராஜா”
சின்ன சின்ன தவறுகளால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். மகன போலீஸ்லசேர்த்து விட்ட போலீஸ் நம்மள ஒன்னும் பண்ண மாட்டாங்க என யோசித்து, தன் செல்வாக்கை பயன்படுத்திவிருப்பமில்லாத மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார். பேலீஸான தைரியமில்லாத ஹீரோ ஒருசந்தர்ப்பத்தில் வில்லியிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வில்லியிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடிக்குமுக்கியத்துவம் கொடுத்து.... ஆக்ஷன் மற்றும் காதல் கலந்து திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர் A.வசந்த்குமார். இவர் இயக்குனர் A.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
ஜாலியான அப்பாவாக மகாநதி சங்கர், அப்பாவின் இம்சைகளால் அவஸ்த்தைப்படும் மகனாக V.R.வினாயக்,வல்லியாக அங்காடி தெரு சிந்து நடிக்க கதாநாயகிகளாக தியா, வைஷ்னவி, மனோபாலா மற்றும் பலர்நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, இயக்கம் A.வசந்த்குமார். ஔிப்பத...