ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கிய ஜம்மு தாசில்தாரின் அதிரடி முடிவு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை பல நிகழ்ச்சிகள் நிரூபித்த நிலையில் தற்போது அவர் ஆன்மீகப்பயணமாக சென்றுள்ள இமயமலை பகுதிகளிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நம்மூரில் உள்ள பல நடிகர்களை ஜம்முகாஷ்மீர் உள்பட இமயமலை பகுதியில் யாருக்கும் தெரியாது. ஆனால் ரஜினியை பார்த்ததும் அவருடன் புகைப்படம் எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் அந்த பகுதி பிரமுகர்கள் உள்பட அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பொன்னி என்ற பகுதியின் தாசில்தார் ரமேஷ் என்பவர் ரஜினியிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அவரிடம் எந்த பேப்பரும் இல்லாததால் தனது சட்டையில் ஆட்டோகிராப் போடும்படி அவர் கேட்டுக்கொள்ள அதன்படி அவருடைய சட்டையில் ரஜினி கையெழுத்திட்டார். மேலும் ரஜினியின் காலை தொட்டு கும்பிட்டு அந்த தாசில்தார் விடைபெற்ற அவர்...