
ரஜினிகாந்த்யை நக்கல் அடித்த பிரபல அரசியல் தலைவர்
திருப்பரங்குன்றம்: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதும் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியின் போதும் ரஜினி தெரிவித்த வெவ்வேறு கருத்துகளை தினகரன் நக்கல் அடித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேரணி சென்ற மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூற ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றிருந்தார்.
அப்போது ரஜினி பேசுகையில் தூத்துக்குடியில் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் சமூக விரோதிகள்தான், மக்கள் இல்லை என்றார். போராட்டம் நடத்தியதை சமூக விரோதம் என்று ரஜினி கூறியதாக எதிர்ப்புகள் கிளம்பின இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிட...