வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்? என்ன லட்சியம்?
டல்லாஸ்: தமிழ் நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது தெரிந்தது. முதன் முதலாக வட அமெரிக்காவில் ரஜினிகாந்த் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.
அதென்ன அமெரிக்காவில் ரஜினி பேரவை? இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொணடு ஏன் அமெரிக்காவில் ரஜினிகாந்துக்கு பேரவை தொடங்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, வரிசையாக காரணங்களை அடுக்கினார்கள்.
இதுகுறித்து டல்லாஸ் நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகரும், இந்த அமைப்பின் அமைப்பாளருமான இர தினகர் கூறுகையில், "வட அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின் அரசியலுக்கும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் லட்சியம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார். அது போல் ரஜினி தமிழக முதல்வர் ஆன...