ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து மணல் மாபியா இளவரசன் அதிரடி நீக்கம்..!
சமீபத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் மணல் மாஃபியாக்களை எதிர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரல் எழுப்பியிருக்கிறார். “என் மண்ணையும் மக்களையும் சுரண்டியவர்களுக்கு அழிவு தான் முடிவு” என்றும் அதில் கூறியிருப்பார். அப்படிப்பட்டவரின் மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் பல வருடமாக மணல் கொள்ளையைராக, மணலை திருடி விற்பவராக செவ்வனே செயல்பட்டு வருகிறார் என்றால் நம்பமுடிகிறதா.?
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் இளவரசன் விருத்தாசலத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு, கோமுகி ஆகிய ஆறுகளில் இருந்து மணலை சுரண்டி விற்று, கோடிகோடியாக சம்பாதிக்கிறார். வன்னியர் சங்கம், பாமக, அதிமுக என்று தொடங்கி. கட்சி கட்சியாக தாவினாலும் தனது ஆதார தொழிலான மணல் விற்பனையை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை.
கருவேப்பிலங்குறிச்சி, நேமம், மேலப்பாளையூர், மருங்கூர், தொழூர், காவனூர், பவழங்குடி, தேவங்க...
