இனி கமலின் வாழ்க்கை கேள்வி குறி? – ரஜினிகாந்த்
நடிகர் கமலின் சகோதரர் சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் காலமானார். அவருக்கு இரங்கல் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், கமல், ரஜினி, சாருஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ரஜினி பேசும்போது,
கமலை பெற்ற சீனிவாசன், அவரை வளர்த்த சாருஹாசன், அவரை ஆளாக்கிய சந்திஹாசன் என கமலுக்கு மூன்று தந்தைகள். நான் சந்திரஹாசனை இரண்டொரு முறைதான் சந்தித்திருக்கிறேன். ஆனாலும், அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.
கமல் பொருளாதார ரீதியாக எதுவும் சேர்த்து வைக்கவில்லை. அப்படியிருந்தும் அவர் சேர்த்து வைத்திருக்கிறார் என்றால் அது சந்திராஹாசனால்தான். அவர் இல்லாமல் இனி எப்படி கமல் தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை காப்பாற்ற போகிறார், எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்பதுதான் என்னுடைய கவலை.
கமல் மிகப்பெரிய கோபக்காரர். அவருடைய 10 சதவீத கோபத்தைத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்....