சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட ‘தரமணி’ பாடல்களை, மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'தரமணி' பாடல்களை, மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்தனர் இயக்குநர் ராமும், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும்.
ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ் குமார் தயாரித்து, ராம் இயக்கி இருக்கும் திரைப்படம் 'தரமணி'. மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, ‘From the Bottom of Our Hearts’ என்னும் காணொளியை உருவாக்கி, அதை யூ டூபில் 'தரமணி' படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். வெளியான சிறிது நேரத்திலேயே, இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவ ஆரம்பித்து விட்டது. யுவன்ஷங்கர் ராஜாவின் நெஞ்சை வருடும் இசையில் உருவாகி இருக்கும் 'தரமணி' பாடல்களை டிசம்பர் 30 ஆம் தேதி அன்று வெளியிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இயக்குநர் ராம் கூறியதாவது: "தரமணி படத்தின் பாடல்களை ரஜினி சார் வெளியிட்டிருப்பது எங்...
