ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி வழிபாடு செய்தார் கடவுள் கொடுத்த புது அவதாரம் அரசியல்
அரசியல் பிரவேசம் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு 15 நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவ்கோரி என்ற குகைக் கோவிலுக்கு சென்று அவர் வழிபட்டார்.
பின்னர் இன்று உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்று ரஜினிகாந்த் வழிபாடு செய்தார். ஆசிரமம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுவாமி தயானந்த சரஸ்வதியை குருவாக ஏற்று, அவரிடம் உபதேசம் பெற்றவர் ரஜினிகாந்த். தயானந்த சரஸ்வதி உயிருடன் இருந்த வரை கோவையில் உள்ள அவரது ஆஸ்ரமத்துக்கு அடிக்கடி ரஜினிகாந்த் சென்று வந்தார்.
இன்று அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷில் தங்கியுள்ளார். அப்போது மீடியாக்கள் பல அவரிடம் கேள்விகளை எழுப்பின. ஆனால் அவர்களிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேச மறுத்துவிட்டார் ரஜினி.
பின்னர் வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த...
