தமிழ் சினிமாவுக்கு வந்த டைட்டில் பஞ்சம் அதிகமாகும் பழைய படத் தலைப்புகள்
ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பது தற்போது பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரும் சுமையாகவே இருக்கிறது. படத்தின் கதையை எழுதும் போதே பெரும்பாலான இயக்குனர்கள் அதற்குப் பொருத்தமான தலைப்பைத் தேர்வு செய்துவிடுவார்கள். ஒரு படத்தின் தலைப்பு என்பது அந்தப் படத்திற்கான முதல் அடையாளம், அதன் பின்தான் படத்தின் கலைஞர்கள் அனைவரும்.
பழைய அல்லது ஹிட்டான பாடல்களிலிருந்துதான் பலரும் தங்கள் படங்களுக்கான தலைப்புகளைத் தேர்வு செய்வது வழக்கமாக இருக்கிறது
ஒரு படம் வெளிவந்த பிறகே அந்தப் படத்தைப் பற்றிய நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் நினைவில் வைக்கப்படுவார்கள். படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே ஒரு படத்தைப் பற்றிப் பேசும்போது அந்தப் படத்தின் தலைப்பை மையப்படுத்தித்தான் பேச்சுகளும் இருக்கும்.
பத்து வருடங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு தமிழ்நாடு அரசு வ...