
ரஜினிகாந்த்வுடன் இணையும் அஜித்தின் ராசி இயக்குனர்
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து அவர் எந்த இயக்குநருடன் கைகோர்க்க உள்ளார் என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டு வந்தன.
இந்த வரிசையில் விஸ்வாசம் பட இயக்குநர் சிவாவும் இணைந்துள்ளார். கடந்த மே மாதத்தில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சிவா சந்தித்ததைத் தொடர்ந்து, விஸ்வாசம் படத்தின் சென்டிமென்ட் காட்சிகளுக்காக ரஜினிகாந்த் பாராட்டியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் சிவாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்த சிவா ரஜினியின் அழைப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளார். அதனால் ரஜினிகாந்தின் படத்...