அரசியலை பற்றி பேச ரஜினிக்கு தகுதி இல்லை – சரத்குமார் அதிரடி பேச்சு!
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சரத்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகர்சங்க தேர்தல் பிறகு எந்த வித நிகழ்வுகளை சந்திக்காமல் இருந்த சரத்குமார் நடிப்பதில் தீவிரம் காட்டபோவதாக சொன்ன சரத்குமார் அதில் முழுநேர கவனத்தையும் செலுத்தி வந்தார். ஆரசியலிலும் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்த சரத்குமார் நேற்று அதிரடியாக ஒரு பேட்டி அதுவும் ரஜினிகாந்த்துக்கு எதிராக.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அரசியலை பற்றி பேசாமல் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், ” தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது” என பேசியிருந்தார். இதற்கு தற்போது சரத்குமார் தரப்பில் கடும் எதிர்ப்பு வந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், ” தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து கருத்து கூற ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் தமிழக அரசியலுக்கு வந்தால் அதை எதிர்க்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்”...