ரஜினிக்காக தனது வேலையை உதறித் தள்ளிய சினிமா பிரபலம்
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியான ராஜூ மகாலிங்கம் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியில் இணைவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லைகா நிறுவனத்தில் இந்திய தலைமை அதிகாரியாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ராஜூ மகாலிங்கம். லைகா நிறுவனம் சார்பில் ரூ. 450 கோடி செலவில் 2.0 படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். இவரது தீவிர ரசிகரான லைகா புரொடக்ஷன்ஸின் ராஜூ மகாலிங்கம், ரஜினியின் கட்சியில் இணைவதற்காக லைகா நிறுவனத்தில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜூ மகாலிங்கம் அளித்துள்ள பேட்டியில், ‘’முதலில் நான் ரஜினி சாரின் ரசிகர். க...