‘அலேகா’ மூலம் காதலுக்கும் குரல் கொடுக்கும் ஆரி
சிறுவயது முதலே காதலர் தினமும் காதலும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. நானே மறந்தாலும் அதுவே ஞாபகப்படுத்திவிடும். ஏனென்றால், காதலர் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ( நேற்று ) என் பிறந்த நாள். ஆனால், இந்த வருட பிறந்தநாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அது நான் நடிக்கும் 'அலேகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், என் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாவதில் பெருமைதான் .
இது,
காமத்தை வியாபாரமாக்கும்
நோக்கத்தோடு
எடுக்கப்பட்ட படம் இல்லை
இது காதலின்
உயர்வை சொல்லும் படம்
காதலின் தெரிவே காமத்தின் தொடக்கம்
காதல் இல்லா காமமும் இல்லை..
காமம் இல்லா காதலும் இல்லை.
ஆனால்..
காமத்தில் வரும் காதல் காலம்தாண்டி வாழ்வது இல்லை. காதலில் வரும் காமம்தான் காலம்தாண்டி வாழும்.
இது எங்கள் கதை அல்ல
உங்கள் காதல் கதை..
என்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு விளக்கமளித்துள்ளார்.
'மாலை பொழுதின் மயக்கத்திலே'...