ஆண் தேவதை – திரைவிமர்சனம் (ரசிக்கும் தேவதை) Rank 4/5
தமிழ் சினிமாவுக்கு மிக சிறந்த பொற்காலம் என்று தான் சொல்லணும் கடந்த மூன்று வாரங்களாக மிக சிறந்த படங்கள் வந்தவண்ணம் உள்ளது அந்தவகையில் இந்த வாரம் மிக சிறந்த படம் ஒன்று அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறது என்று சொன்னால் மிகையாகது ஆம் சமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளிவது இருக்கும் படம் தான் ஆண் தேவதை .மிக அருமையான குடும்ப சித்திரம் நீண்ட இடைவெளிக்கு பின் வந்து இருக்கும் குடும்ப கதை என்றும் சொல்லலாம்.
இயக்குனர் தாமிரா இவர் பாலச்சந்தர் சிஷ்யன் என்பதை மிக அழகாக நிருபித்துள்ளார்.தன் குருநாதரை போல நல்ல குடும்ப படத்தை அதுவும் பாலச்சந்தர் சொன்ன ஒரு பாடல் வரியில் இருந்து கதை கருவை தயார் செய்து இருப்பது அருமை வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ள படம் தான் ஆண் தேவதை அப்புறம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ஆணை தேவதையாக காண்பித்து இருக்கிறார் இயக்குனர் தாமி...