Saturday, November 9
Shadow

Tag: #rana

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கிய கவுதம் மேனன்

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை தொடங்கிய கவுதம் மேனன்

Latest News, Top Highlights
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருக்கிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. தனுஷ் - மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், கவுதம் மேனன் விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கி வந்தார். தனுஷும் வடசென்னை படத்தில் பிசியாகி விட்டார். இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு கவுதம் மீண்டும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ள கவுதம் மேனன் படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய...