சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் ரஜினி பட பிரபலங்கள்
சிவகார்த்திகேயன் தற்போது, பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் 2.0 பட பிரபலங்கள் இருவர் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒளிப்பதிவு பணிகளை நிரவ் ஷாவும், கலை பணிகளை முத்துராஜும் மேற்கொள்ள இருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவிக்குமார் இயக்கும் இந்த படம் விஞ்ஞானி தொடர்பான கதையாக உருவாக இருக்கிறதாம். வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் விஞ்ஞானியாக சிவா நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிப்ப...