
‘புஷ்பா புருஷன்’ கேரக்டரால் புகழ் பெற்ற நடிகை ரெஸ்மா பாஸ்புட்டி பிறந்த நாள் பதிவு
பூர்வா என்ற இயற்பெயயர் கொண்ட இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது பல தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதோடு, நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார்.
அமெரிக்காவில் பிறந்த இவர் தனது திரையுலக வாழ்வை தொடங்கும் முன்பு விமான பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார். இவரது தந்தை பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர் ஆவார். ஆனாலும், தனது திறமை மூலமாகவே இவர் திரையுலகில் நுழைந்தார்.
தொலைகாட்சி தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கிய இவர், வாணி ராணி, வம்சம், சுந்த கண்டம் மற்றும் என் இனிய தோழா உள்பட பல தொலைகாட்சி தொடர்களில் நடித்தார்.
தமிழில், கோ2 மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் புஷ்பா கேரக்டரில் இவர் நடிகர் சூரியின் மனையாக நடித்தார். இந்த படம் முழுவதும் அவர் புஷ்பா புருஷன் என்று அழைக்கப்படுவார். இதனால் இவர் பெரியளவில் பிரபலமடைந்தார்.
இ...