
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இப்படத்தைத் தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு என்று வரிசையாக பல படங்களில் நடித்தார். ஆனால், எந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த நிலையில், தான் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஹரிஷ், ரைசா உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் செம ஹிட் கொடுத்தது.
இந்நிலையில் சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.
ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் க...