எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம் தான் ரிச்சி -நிவின் பாலி
சினிமாவுக்கு மொழி கிடையாது. அதே போல் தான் ஒரு நல்ல நடிகருக்கும். ஒரு அபிமான நடிகர், ஸ்டாராகவும் ஜொலிக்கும் பொழுது அவர் எல்லைகள் தாண்டி, மொழி வித்யாசங்கள் தாண்டி ரசித்து கொண்டாடப்படுவார். அது போன்ற ஒரு நடிகர் தான் நிவின் பாலி. அவரது முதல் நேரடி படமான 'ரிச்சி' வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார்.
'ரிச்சி' குறித்து நிவின் பாலி பேசுகையில், '' தமிழ் சினிமாவின் ரசிகன் நான். எனது இந்த முதல் நேரடி தமிழ் படத்தில் நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'ரிச்சி' ஒரு புது அனுபவமாக இருக்கும். கதையின் பின்னணியும் அணுகுமுறையும் அப்படி. இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமான மற்றும் சவாலான ஒன்று. இப்படத்திற்கு சொந்த குரலில் டப் செய்துள்ளேன். இதற்காக மிகவும் மெனக்கெட்டேன். ஏனென்றால் ஒரு தமிழ் வட்டார பாஷயை பேசுவது சுல...