நடிகர் இரா. எஸ். மனோகர் பிறந்த தினம் இவரை பற்றிய சில வரிகள்
பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகரான இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்நாடு, நாமக்கலில் பிறந்த இவரது இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவராவார்.
மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அவற்றுள் இலங்கேசுவரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரசித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் மற்றும் திருநாவுக்கரசர் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இவர் நடித்த திரைப்படங்கள்
லட்சுமி, அதிசயப் பெண், வண்ணக்கிளி, கைதி, கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், காவல்காரன், அடிமைப் பெண், உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, பல்லாண்டு வாழ்க மற்றும் பல படங்கள் ஆகும் ...