Tag: #saalai
சுற்றிலும் துப்பாக்கிகள்… சுழலும் பனிப்புயல்… நடுங்கும் குளிர்..! காஷ்மீரில் பதைபதைக்கும் படப்பிடிப்பு அனுபவங்கள் : ‘சாலை’ பட இயக்குநர் சார்லஸ்!
முகிலன் சினிமாஸும், தங்கத்துளசி புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதைதான் படம்.
‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா (KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்றுள்ளனர். 'ஆடுகளம்' நரேன் தவிர பலரும் புதுமுகங்கள்.
‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள அசாதாரணத் சூழலில் காஷ்மீரில் தாங்கள் சுற்றித்...