மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்
ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் "சாகாவரம்" இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது.
விழாவில் சாகா அறக்கட்டளை சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், "எந்த நேரத்திலும் எந்த வித விபத்தும் நிகழலாம், அந்நேரத்தில் நாம் பதட்டம் அடையாமல் விபத்து நேர்ந்தவருக்கு முதலுதவி எவ்வாறு செய்வது என்பதை எங்கள் சாகா அறக்கட்டளை மூலமாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம். மேலும் ஒருவர் இறந்த பின்பும் அவர் உடலில் உள்ள பாகங்கள் மற்றவர்களுக்கு எந்த வகையில் உதவிகரமாக இருக்கும் என்பதையும், இறப்பின் பின்பும் உடல் தானத்தால் நாம் வாழலாம் என்ற உன்னத கருத்தையும் அனைவரின் மனிதிலும் விதைக்கின்றோம். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மருத்துவர்கள், அதனால் இங்கு பயிற...
