
‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்களே கெட்டுப் போகாதீர்கள்! சிவகுமார் பேச்சு!
திறமைசாலிகள் கலைஞர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள், கெட்டுப் போகாதீர்கள். என்று ஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:.
பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியரு
மான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான 'சகலகலா வல்லபன்' நூல் வெளியீட்டு விழா நேற்றுமாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
இந்நூலை அருள்செல்வன் தொகுத்துள்ளார்.
விழாவில் நூலை வெளியிட்டு நடிகர் சிவகுமார் பேசும் போது,
''
திருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக்கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனாள் தாய். அப்போது அந்த பையன் இட்லி துணியை தூக்கி மேலும் 2 இட்லியை எடுத்துச் சாப்பிட...