சக்க போடு போடு ராஜா – விமர்சனம் Rank 2.5/5
சென்னையில் மிகவும் வசதியானவரான வி.டி.வி கணேஷின் மகன் சந்தானம். இவருடைய நண்பரான சேதுவின் காதலுக்கு பல எதிர்ப்புகளை மீறி உதவி செய்கிறார் சந்தானம். சேது காதலிப்பது, பிரபல ரவுடி சம்பத்தின் தங்கை. இதனால், கோபமடையும் சம்பத், சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்.
சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பெங்களூரு சென்று விடுகிறார். அங்கு வைபவியை பார்த்தவுடன் காதல் வலையில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். வைபவியின் அண்ணன் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தானத்தை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இதற்கிடையில் வைபவியை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.
இறுதியில் இந்தப் பிரச்சனைகளை சந்தானம் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம், தோற்றம், ஸ்டைல், நடனம், சண்டை என அனைத்திலும் தன்னுடைய திறமையை...